விகாரைகளை பதிவது இலகு!இலங்கையில்  பௌத்த வழிபாட்டு தலங்களை பதிவுசெய்வதை இலக்குவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

பௌத்த வழிபாட்டு தலங்களை பதிவு செய்வதற்கு பெறவேண்டிய அனுமதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பௌத்தசாசன அமைச்சு தீர்மானித்துள்ளது.

பௌத்த ஆலோசனைக் குழு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த மாற்றங்கள் ஏனைய மதங்களைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு ஏனைய மத வழிபாட்டு தலங்களை பதிவு செய்வதற்கு வேறு நடைமுறைகள் உள்ளன. எனினும் அனைத்து விண்ணப்பபடிவங்களையும் பௌத்தசாசன அமைச்சிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சின்  செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments