உக்ரைன் நெருக்கடி: ரஷ்யாவும் பெலாரஸ்சும் போர் பயிற்சிகளைத் தொடங்கின!


உக்ரைன் மீதான பதட்டங்களைத் தணிப்பதற்கு இன்று வியாழக்கிழமை தீவிரமடைந்துள்ளன. பனிப்போருக்குப் பின்னரான ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பாரிய பாதுகாப்பு நெருக்கடிக்களுக்கு மத்தியில் இராணுவ சூழ்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் இன்று பெலாரஸியப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இப்பயிற்சிகள் 10 நாட்கள் நடைபெறும். அத்துடன் பயிற்சியின் நோக்கம் ஒரு தற்காப்பு நடவடிக்கைகளைக் கொண்ட வெளிப்புற ஆக்கிரமிப்பை நிறுத்தும் பயிற்சிகள் என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

ஆனாலும் இருநாடுகளும் என்னென்ன இராணுவ தளபாடங்களை பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது என்பதைக் குறிப்பிடவில்லை. 

இப்பயிற்சியில் பங்கெடுக்க 30,000 ரஷ்யப் படைகள் ரஷ்யா அனுப்பியுள்ளதாக மேற்கு நாடுகள் கூறியுள்ளன.

இதற்கு இடையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் ஆரம்ப்பித்தால் அதற்கு தாயராகும் வகையில் அமெரிக்க துருப்புக்கள் போலந்தில் இருப்பதை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

உக்ரைனில் பதட்டத்தினால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டால் கூடுதலாக 1,000 படையினரை ஈடுபடுத்த இங்கிலாந்து தயாராக உள்ளது என பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார்.

No comments