படையினர் உட்பட 137 உக்ரைன் குடிமக்கள் உயிரிழப்பு!


உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விடியற்காலையில் தொடங்கியதில் இருந்து இராணுவத்தினர் உட்பட 137 உக்ரைனிய குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும் 316 பேர் காயமடைந்ததாகவும் உக்ரேனிய உக்ரேனிய அதிபர் தெரிவித்ததார். 

முன்னதாக 40 படையினரும் 10 பொதுமக்களுமாக 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

கெய்வ் மற்றும் செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள உக்ரேனிய விமான தளத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றின.

ரஷ்ய வான்வழிப் படைகள் அன்டோனோவ் விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. இது உக்ரைனின் கெய்வ் நகரின் மையத்தில் இருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ளது.

செர்னோபில் மின் நிலையத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அப்பகுதியை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலங்கு வானூர்திகள் மூலம் ரஷ்யப் படையினர் அதிகாலையில் தரையிறக்கப்பட்டனர்.

பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, உக்ரைனில் உள்ள லிவிவ் முழுவதும் மின் விளக்குகளை அணைக்க அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த நகரத்தில் தான் பல தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை இயங்குகின்றன. அவை சமீபத்திய வாரங்களில் பாதுகாப்பு காரணமாக கிய்வில் இருந்து இடம் பெயர்ந்தன.

No comments