வடக்கு உக்ரைனில் அணு மின்நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யப் படைகள்!!


உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு மின் நிலையத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அப்பகுதியை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை  அணுமின்நிலையத்தின் நிர்வாகத்தினர் எவரும் அங்கிருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பராமரிக்கவோ, அறிவுரைகள் வழங்கவோ, அல்லது அதைப் பாதுகாக்கவோ எவரும் அங்கிருக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபரின் அலுவலகத்தின் ஆலோசகர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.


No comments