9 ஆம் நாள் போராட்டம்: யேர்மனியை வந்தடைந்து!

கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய  ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். நெதர்லாந்து , பெல்சியம் மற்றும் லக்சாம்பூர்க்

நாடுகளை கடந்து இன்று 24/02/2022 லுக்சம்பூர்க் - யேர்மனி  நாட்டின் எல்லையினை  வந்தடைந்தது.

இன்று அத்தேர் மாநகரசபையில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராகவும் சம நேரத்தில் முதல்வராகவும் அங்கம் வகிப்பவருடன் அரசியற் சந்திப்பு நடைபெற்றது. தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் தமிழீழத்தின் விடுதலைக்காக தம்மாலான பங்களிப்புக்களையும் செய்ய காத்திருப்பதாக  உறுதிதரப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து பெல்சியம் ஆர்லோன் மாநகரசபையிலும் முக்கிய கலந்துரையாடலும்  ஊடகச்சந்திப்பும்  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது 

நாளை 25/02/2022 யேர்மனிய நாட்டில் அமைந்துள்ள சார்புருக்கன் மாநகரசபையில் காலை 11மணிக்கும்  பிரான்சு நாட்டில் சார்குமின் மாநகரசபையிலும்  மதியம் 2 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாநகரசபை முதல்வரோடும் மற்றும் ஊடகங்களோடும் கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments