இந்தியா பிடியை இழக்கின்றது?

இந்தியா இலங்கையின் வடபகுதி மீனவர்களை புறக்கணிப்பதால் அது மூலோபாயரீதியில் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும் என நியுஸ்இன்ஏசியா தெரிவித்துள்ளது.

நியுஸ் இன் ஏசியா மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்தியாவின் போட்டியாளரான சீனா அபிவிருத்திதிட்டங்களின் உதவியுடன் வடபகுதி மீனவர்களை கவர்ந்துவருகின்ற சூழ்நிலையில் இந்தியா வடபகுதி மீனவர்களின் துயரங்களை புறக்கணிப்பது அதற்கு மூலோபாய ரீதியில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

வடஇலங்கையை தனதுமூலோபாய கொல்லைப்புறமாக கருதும் இந்தியா அங்கு சீனாவின் பிரசன்னத்தை வெறுக்ககூடும்.

தமிழ்நாடு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை காரணமாகஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள குறுகிய கடற்பாதையில் தங்களிற்கு உள்ள உரிமைகளை வடபகுதி மீனவர்கள்இழந்துள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் ஆழமற்ற கடலின்அடியை துழாவிச்செல்லும் உள்ளுர்மீனவர்களின் வலைகளை அழிக்கும் டிரோலர்களை பயன்படுத்துகின்றனர்.

இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்துவது குறித்தும்அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பல வருடங்களாக முறையிட்டும் நடவடிக்கைகள் எடுத்தும் அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டின் வாக்குகளை இழக்ககூடும் என்ற அச்சம் காரணமாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளனர்.

தென் இந்தியமாநிலத்தில் மீனவர்கள் வாக்குபலம் மிக்கவர்கள்.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படும்போதெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பெரும் போர்க்கொடி தூக்குவார்கள்

 கூச்சலிடுவார்கள்,அதன் பின்னர்புதுடில்லி அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்திவிடுதலை செய்யுமாறு கொழும்பை கேட்டுக்கொள்ளும்.

வடபகுதிமீனவர்களின் நலன்களை காப்பாற்றுவதை விட இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை என்பதால் கொழும்பு அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும்.

வடபகுதி வெள்ளாளர்களின் ஆதிக்கத்தில் உள்ளதால் இலங்கை தமிழ்கட்சிகள் மீனவர்களின் விவகாரத்தை உயர்த்திபிடிப்பதில்லை,மேலும் வடபகுதி அரசியல்வாதிகள் சமஸ்டி ஆட்சியை பெற்றுக்கொள்வதிலேயே ஆர்வமாக உள்ளனர் தமிழ்நாடு மீனவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதில் அவர்களிற்கு ஆர்வம் இல்லை,தமிழர்களிற்கு சுயாட்சி வழங்குமாறு இலங்கைஅரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு தமிழக அரசியல்வாதிகளின் ஆதரவு அவசியம் என்பதால் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழக இந்திய அரசியல்தலைவர்களுடன் முரண்பட விரும்பமாட்டார்கள்.

வேறு வழியின்றி சில வேளைகளில் உதவியற்ற வடபகுதிமீனவர்கள் இந்திய மீனவர்களை தாக்குவதுண்டு,சமீபத்தில் நடுக்கடலில் இடம்பெற்ற மோதலில் இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்புதெரிவித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் 30 ம் திகதி முதல்வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்துமாறாக அவர்களில்ஒருவரான சுரேஸ்பிரேமசந்திரன் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் சகாக்களிற்கு எதிராக வடபகுதி மீனவர்கள் மோதலில் ஈடுபடுவது உகந்தவிடயமல்ல என தெரிவித்துள்ளார்.

பிரேமசந்திரனும்அவரது சகாக்களும் இந்த விடயத்தை தங்கள் எதிரி மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தாக்குவதற்காகவே பயன்படுத்துகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு தீர்வைகாணவேண்டிய முழுப்பொறுப்பையும் அமைச்சர் மீது அவர்கள் சுமத்துகின்றனர்.

எனினும் இந்தியஇலங்கை அரசாங்கங்களின் உதவியில்லாத நிலையில் இந்த விவகாரத்தில் எதனையும் செய்ய முடியாத நிலையில் தேவானந்தா காணப்படுகின்றார்.

பாதிக்கப்பட்டமீனவர்களிற்கு வேறு தொழிலில் ஈடுபடுவதற்கான நிதியை வழங்குவதை மாத்திரம்அவரால் செய்யமுடியும்.

இலங்கைக்கான சீனதூதுவர் உதவமுன்வந்துள்ளநிலையில் கடலட்டைபண்ணையையும் மீன்பதப்படுத்தும் தொழிற்சாலையும் கடந்த டிசம்பரில் ஏற்படுத்தப்பட்டன.

சீன தூதுவர் இங்கு விஜயம் செய்து இந்த துறையில் மேலும் உதவிகளை வழங்க தயார் என தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள சில தீவுகளிற்கும் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஆனால் இந்தியா வடபகுதிகுறித்தசீனாவின் ஆர்வத்தை தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயமாக கருதுகின்றது.

வடஇலங்கையின் தீவுப்பகுதிகளில்மின்நிலையங்களை ஏற்படுத்தும் திட்டத்தி;றகு தனது பாதுகாப்பை காரணம் காட்டி இ;ந்தியா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.கேள்விப்பத்திர முறை மூலம்சீன நிறுவனம் இந்த திட்டத்திற்கான அனுமதியை பெற்றிருந்தபோதிலும் இலங்கை இந்த திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

ஆனால் இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சீனா வடபகுதிக்குள் காலடி எடுத்துவைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்வதை தடுத்துநிறுத்தப்போவதில்லை,குறிப்பாக அங்குள்ள மீன்பிடித்துறைக்குள் ஊடுருவுவதை சீனா கைவிடப்போவதில்லை.

இலங்கைகடற்பரப்பில் தனது மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதை இந்தியாவால் தடுத்து நிறுத்தமுடியாவிட்டால் ( அரசியல் காரணங்களிற்காக அதனால் செய்ய முடியாது) இந்தியா ஏனைய வருமானம்ஈட்டித்தரும் அபிவிருத்தி திட்டங்களை இலங்கை மீன்பிடித்துறை அமைச்சுடன் இணைந்து முன்னெடுப்பதன் மூலம் இலங்கை தமிழ் மீனவர்களை கவர முயலவேண்டும்.

இந்தியாவால் அதனை செய்ய முடியாவிட்டால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதை மாத்திரம் அது செய்தால் கூடிய விரைவில்இலங்கையின் வடபகுதி மீனவர்கள் மத்தியில் சீனாகாலடி பதிக்கும்- இலங்கை மூலோபாய ரீதியில் பெறுமதியான விடயத்தை சீனாவிடம்இழக்கும்.

மீனவர் விவகாரத்தை ஐநாவிற்குகொண்டுசெல்வது குறித்த தனது எச்சரிக்கையை தமிழ்தேசியமக்கள் முன்னணியின் தலைவர் முன்னெடுத்தால் மீனவர் விவகாரம் மேலும் சிக்கலானதாக மாறும்.

இலங்கை மீனவர்களிற்கு மீன்பிடி உபகரணங்களையும் பயிற்சியையும் வழங்குவதன் மூலம் அவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தொழில் ஈடுபடுவதை இந்தியா ஊக்குவிக்கவேண்டும் என்ற யோசனையை டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்முன்வைத்துள்ளார்.

எனினும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே முயற்சி செய்து தோல்வியடைந்த விடயம் இதுவென்பதால் இது சாத்தியமாகபோவதில்லை.

No comments