டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் அகதிகள்?


20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கை தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை பிரிட்டிஸ் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இவர்கள் அமெரிக்காவின் டியோகோ கார்சியா கடற்படை தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் உறுதி செய்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்தவேளை அவர்களது படகு பழுதடைந்துள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படை முகாமில் உள்ளவர்களிடம் படிவம் ஒன்றை வழங்கி அதனை பூர்த்திசெய்யுமாறு கேட்டுள்ளனர் என  அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என என ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து அவர்களின் அடைக்கல கோரிக்கைகளை ஆராய்வார்களா? எதற்காக அந்த ஆவணத்தை பூர்த்தி செய்யவேண்டும் என அகதிகளிடம் தெரிவித்துள்ளார்களா பிரிட்டன் அவர்கள் சட்ட ஆலோசனை பெறுவதற்கு அனுமதிக்குமா? ஐநா அவர்களை தொடர்புகொள்ள அனுமதிக்குமா எனவும் ஆசிய பசுபிக் அகதிகள் உரிமை வலையமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மொரிசியசின் உரிமை கோரல்களின் பேரில் சாகோஸ்தீவுக்கூட்டத்தை வைத்திருப்பதற்காக இங்கிலாந்து சர்வதேச சட்டத்தை மீறியது என கண்டறியப்பட்டுள்ளது, தீவுக்கூட்டத்தில் உள்ள அகதிகளை கையாளும்போது சர்வதேச சட்டங்களை மீறமாட்டோம் என பிரிட்டன் உறுதிவழங்குமா?யுஎன்எச்சிஆர் உதவ முடியுமா எனவும் அகதிகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

No comments