பிரேசில் நிலச்சரிவு: 100 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் வீதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மலைப்பகுதிகளில் உள்ள வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் மகிழுந்துகள் அடித்துச் செல்லப்பட்டன.

3 மணி நேரம் பெய்த மழை அந்நகரத்தையே அடித்துச் சென்றுள்ளது. பெரும் பகுதிகள் இடிந்து வீழ்ந்துள்ளது. வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 

உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 94 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 35 பேர் காணாமல் போயுள்ளனர். 80 வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் சேதம் மற்றும் தெருக்களில் வாகனங்கள் மிதப்பதைக் காட்டியது.

நகரம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மகிழுந்துகள் கம்பங்களில் தொங்கியும் கவிழ்ந்தும் காணப்படுகின்றன.

பெட்ரோபோலிஸ் என்பது ரியோ டி ஜெனிரோவிற்கு மேலே உள்ள மலைகளில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது 19 ஆம் நூற்றாண்டில் பிரேசிலின் மன்னர்களுக்கு கோடைகால இடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments