முற்றும் திறந்த பிக்கு கைது!

தென்னிலங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வட்டவளை ரொசெல்லா ஹைதாரி விகாரையின் பிரதம பிக்கு நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி கடந்த 20ஆம் திகதி விகாரைக்கு வரவழைக்கப்பட்டு பிரதம பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாணவி தனது தந்தையிடம் கூறியதையடுத்து தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பிரகாரம், மாணவி சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்படவுள்ள நிலையில், பிரதம பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே குறித்த சிறுவனுக்கு நீதிகோரியும், ஏனைய சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், மேற்படி பிக்குவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், பதாதைகள் தாங்கி, கோஷங்களை எழுப்பியவாறு ஹயிற்றி தோட்டத்துக்கு சென்றனர். அங்கு விகாரையின் முன் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இது தொடர்பில் பொலிஸாரிடமும் வேண்டுகோள் விடுத்தனர்.

No comments