உக்ரைனிலிருந்து பணியாளர்கள், குடும்ப உறவினர்களை வெளியேற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உத்தரவு


உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக உக்ரைனின் தலைநகர் கிய்வ்விலிருக்கும் தங்களது தூதரங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்கு திருப்பி அழைக்கிறது அமொிக்கா மற்றும் பிரித்தானியா.

உக்ரைனை விட்டு வெளியேற விரும்பும் தூதரக பணியாளர்கைள வெளியேற வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த முடிவானது உக்ரைனுடனான எங்கள் ஆதரவையோ அல்லது அர்ப்பணிப்பையோ எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. 

நாங்கள் இராதந்திரப் பாதையைத் தொடர்கிறோம். ஆனால் ரஷ்யா மேலும் விரிவாக்கத்தை தேர்வு செய்தால், இது  விவேகமான முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்று அமெரிக்க மூத்த வெளியுறவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு விடையளிக்கும் வகையில், சில தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கிய்விலிருந்து திரும்பப் பெறப்படுவார்கள்" என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் தூதரகம் திறந்த நிலையில் உள்ளது என்றும் அத்தியாவசிய பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் முடிவை முன்கூட்டிய எச்சரிக்கையின் வெளிப்பாடு என்று அழைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல், ஐரோப்பிய ஒன்றியம் இதேபோன்ற நடவடிக்கையைத் திட்டமிடவில்லை, ஆனால் இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள அமெரிக்காவின் காரணங்களைக் கேட்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு அலுவலகம் நேற்று சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கையில், உக்ரைனை ஆக்கிரமித்து ஆக்கிரமிக்கலாமா என்று கருதும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவான தலைவரை கியேவில் நிலைநிறுத்தப் பார்க்கிறது என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கையை முட்டாள்தனம் என்று கூறி நிராகரித்தது.

No comments