ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு!! பலர் காயம்!!


ஜேர்மனி தென்மேற்கு நகரமான ஹைடெல்பெர்க்கில் பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரை அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை 1.30 மணியளவில் விரிவுரை அரங்கில் நுழைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மாணவன் என்றும் அரசியல் மற்றும் மத நோக்கங்கள் எதுவும் இல்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என ஜேர்மனியில் முன்னணி நாளேடான பில்ட் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டு இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஹைடெல்பெர்க்கின் நியூன்ஹைமர் ஃபெல்ட் பகுதியைத் தவிர்க்குமாறு ட்விட்டரில் காவல்துறையினர் மக்களைக் கேட்டுக் கொண்டனர்.

சிறப்புப் படையினரும் காவல்துறையினரும் குறித்த பகுதியைத் தேடி வருகின்றனர் ஆனால் அந்த நபருக்கு  பின்னால் யாரும் இல்லை என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments