பிரான்சில் கல்வி நிறுத்தப் போரட்டம்!! 5 மில்லியன் முகக்கவசங்களை வழங்க அரசாங்கம் உறுதி!!


பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வி வேலை நிறுத்தத்தை அடுத்து பிரஞ்சு அரசாங்கம் 5 மில்லின் முகக்கவசங்களை வழங்கும் என்றும் 3,300 ஒப்பந்தக் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்றும் கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் (Jean-Michel Blanquer) கூறியுள்ளார்.

கல்வித் தொழிற்சங்கங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து சுகாதார நெருக்கடியின் அனைத்து சவால்கள் இருப்பதை அரசாங்கம் புரிந்துகொண்டதாக ஜீன்-மைக்கேல் பிளாங்கர் கூறினார்.

கொவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments