நொட்டிங்காம் தமிழ்க் கல்விக்கூடத்தில் சிறப்புடன் நடந்த தமிழர் திருநாள்

பிரித்தானியா, நொட்டிங்காம் நகரில் தமிழ்க் கல்விகூட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விக்கூட நிர்வாகிகள் இணைந்து தமிழர்

திருநாளைச் சிறப்பாகாகக் கொண்டாடினார்கள். மங்களவிளக்கு ஏற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு பண்பாட்டு முறையில் நடைபெற்ற பொங்கலில் மாணவர்களும் இணைந்து பொங்கி மகிழ்ந்தார்கள். பாரம்பரிய முறையில் பந்தி வைத்து தலைவாழையிலையில் உணவுகள் பரரிமாறப்பட்டது சிறப்பம்சமாக அமைந்தது. வாடி வாசல் நாடகம் உட்பட பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

No comments