கிளிநொச்சி தீபரவல்:பேரழிப்பு!


நேற்றிரவு கிளிநொச்சி வைத்தியசாலையின் தீக்கிரையான பகுதியை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் இன்று காலை பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே விபத்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் ஒரு பகுதி நேற்றிரவு 11 மணிக்கு ஏற்பட்ட தீப்பரவலால் அழிவடைந்துள்ளது. தீப்பரவல் அவதானிக்கப்பட்டு சில மணி நேரங்களில் கரைச்சி பிரதேச சபை மற்றும் மக்களின் கூட்டு முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறப்படுவதுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை தடையின்றி நடப்பதாக கூறப்படுகிறது.

மார்பு சிகிச்சை பிரிவு, மார்பு சிகிச்சை ஆய்வு கூடம், பாலியல் நோய் தடுப்பு பிரிவு, பாலியல் நோய் ஆய்வு கூடம், களஞ்சியம், கதிர்வீச்சு பிரிவு, ஆகிய சில முக்கிய பகுதிகள் எரிவடைந்துள்ளது.



மிகக் கடுமையான போர் காலங்களிலும் பெரும் சேதங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட வைத்தியசாலை இன்று தீயினால் சேதமடைந்தமை மிகவும் கவலை அளிக்கின்றது.

நள்ளிரவிலும் தீயை அணைப்பதற்கு நேரடியாக சென்று ஒன்றுபட்டு செயற்பட்ட கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் மற்றும் மக்களுக்கும் எமது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.


No comments