புதிய கோவிட் கட்டுப்பாடுகள்!! தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்துப் பிரதமர்!


நியூசிலாந்து பிரதமர் ஓமிக்ரான் பரவலைத் தடுப்பதற்காக கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் தனது திருமணத்தை நிறுத்த வேண்டிய நிலையக்குத் தள்ளபட்டார்.

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தனது திருமணம் நடக்காது என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட கால காதலரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கிளார்க் கைபோர்டு என்பவருடன், 2019-ல் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள பிரதமர் ஜெசிந்தா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், நாட்டில் தொற்று பரவல் அதிகரித்ததால், திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சி போன்றவற்றில், 100 பேருக்கு மட்டுமே அனுமதி, என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து, தற்போதைய சூழலில் தனது திருமண ஏற்பாடுகளை ரத்து செய்வதாக கூறிய நியூசிலாந்து பிரதமர், திருமணம் எப்போது நடைபெறும் என எதுவும் தெரிவிக்கவில்லை.

No comments