அட்லாண்டிக் கடற்பரப்பில் தனியாகச் செல்ல முயன்று 75 வயதான பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார்


அட்லாண்டிக் கடலைக் கடக்கும் முயற்சியில் துடுப்புக்களைக் கொண்ட படகில் பயணம் மேற்கொண்ட 75 வயதுடைய பிரஞ்சு நாட்டவரான ஜீன் ஜாக் சவின் உயிரிழந்துவிட்டார் என அவரது பயணத்தை ஆதரிப்போர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை போர்த்துக்கீச கடலோரகக் காவல்படை அவரது படகு போர்த்துக்கீசிய தீவுக்கூட்டத்தில் கவிழ்ந்து கிடந்ததைக் கண்டுபிடித்தது. அவரைத் தேடுவதற்காக சுழியோடிகள் நேற்று சனிக்கிழமை அனுப்பியது

முன்னாள் பராரூப்பரின் உடல படகின் அறையில் இறந்து கிடந்தார் எனத் தெரிவித்தனர்.


போர்ச்சுகலின் தெற்கு முனையிலிருந்து சனவரி 1 ஆம் திகதி   புறப்பட்டார். ஆனால் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் அவருடனான எந்தத் தொடர்பும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு பீப்பாவைப் பயன்படுத்தி அத்திலாந்திக் கடலைக் 127 நாட்களில் கடந்தார்.


இதைத் தொடர்ந்து துடுப்புக் படகு மூலம் கரீபியன் தீவை அடையும் நம்பிக்கையில் அவரது இறுதிப் பயணம் அமைந்தது. இம்முறை எட்டு மீட்டர் நீளமும் 1.70 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு படகுப் படகை துடுப்பைப் பயன்படுத்தி கடக்கும் முயற்சியில் களமிறங்கினார்.

கடற்பயணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 00.34 மணியளவில் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அவர் சிரமத்தில் இருப்பதற்கான இரு சமிக்கைகளை இயக்கியுள்ளார்.

அவரது மகள் ஃபேஸ்புக் பதிவில், "உடனடியாக பிரெஞ்சு, போர்த்துகீசியம் மற்றும் அமெரிக்க கடல் மீட்பு சேவைகளின் ஒருங்கிணைப்பில் ஒரு தேடல் நடவடிக்கை அமைக்கப்பட்டது என்று கூறினார்.

ஆப்பிரிக்காவின் வடக்கே  வடமேற்கு கடற்கரையில் உள்ள மடீராவின் போர்த்துகீசிய தீவுகளில் இருந்து அசோரஸில் உள்ள போண்டா டெல்கடாவுக்குச் செல்லும் வழியில் தொடர்பில் இருந்துள்ளார்.

சனவரி முதலாம் நாள் படக்குப் பயணத்தை மேற்கொண்டபோது சாதகமற்ற பலத்த காற்றின் காரணமாக அவரது பயணம் 900 கிலோ மீற்றர் தொலைவை நீட்டிக் காட்டியது.

கடந்த புதன்கிழமை வலுவான காற்று வீசியதாக அவர் புகாரளித்துள்ளார். மின்சார நீர் டீசலைனேட்டரைப் பயன்படுத்துவதிலிருந்து துடுப்பால் வலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தனது உடல் சக்தியை செலவளிக்கிறது. ஆனால் நான் ஆபத்தில் இல்லை என்று உறுதியாக இருங்கள் என்று முகநூலில் தெரியப்படுத்தினார்.

No comments