எந்த சிங்கக்கொடி பெரிது!

தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஸ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் இலங்கையின் தேசியக்கொடியுடன் புகைப்படமெடுத்துள்ளமையை சில தரப்புக்கள் விமர்சித்து வருகின்றன.

தமிழ் தேசியம் பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கார்களின் முன்பக்கங்களில் ஒட்டியுள்ள சிங்க கொடிகளை விடவா ஒரு மாணவியின் சிங்கக்கொடி பெரிதாக உள்ளதென நெட்டிசன்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் வாழ்ந்து வரும் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்று, லாகூரில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50 தொடக்கம் 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் இடம்பெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments