கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் நினைவெழுச்சி நாள் - பிறேமகாவன் யேர்மனி

15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள்,

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகம் மிளிர நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் லேப்டினன் தென்றல் நெடுமாறன் அவர்களின் சகோதரியார் திருமதி வனஜா சிறீகரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தமிழாலய மாணவர்களிடையே உரையாற்றிய திரு. சீவரத்தினம் கலைச்செல்வன் அவர்கள் கிட்டு மாமாவின் வீரத்தை, ஈகத்தை கதையாக மாணவர் மனம் நிறுவினார். தமிழீழத்தின் ஓவியர் கிட்டு மாமா என மாணவர்கள் வியந்தது குறிப்பிடத்தக்கது.

No comments