யாழில் விளையாடிய சஜித்! ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமா சஜித் பிரேமதாச கடந்த சில நாட்களாக வடக்கு பல நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 இதன் அங்கமாக “ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல மருத்துவமனைகளுக்கு அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்களையும், "பிரபஞ்சம்" திட்டத்தின் கீழ் பல பாடசாலைகளுக்கு கணினி தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கி வைத்தல் போன்ற பல சமூக நலன்புரித் திட்டங்களை இவ்வாறு மேற்கொண்டு வருகிறார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் அப்பகுதி இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No comments