கடற்படையே பழி தீர்த்தது!

 


மாதகல் கடலில் கடந்த செவ்வாய் கிழமையன்று இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலனின் மரணத்திற்கு நீதி வழங்க கோரி இன்று அவரது இல்லத்திற்கு முன்பாக கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்பு இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

மாதகலில் இலங்கை கடற்படைக்கான நிரந்தர தளமொன்றை அமைக்க பொதுமக்களது காணிகளை கையகப்படுத்த ஏதுவாக அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களது போராட்டத்தால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை இலக்கு வைத்து பொய் குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைப்பது  கொலை செய்வதென இலங்கை கடற்படை குதித்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments