நாலாம் மாடியிலிருந்தும் புதையல் தோண்ட வந்தனர்?

 


கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் புதையல் தோண்ட முற்பற்பட்ட 4ம் மாடி குற்றப்புலனாய்வு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 8பேர் கொண்ட குழு அகப்பட்டுள்ளது.

புத்தளத்தைச் சேர்ந்த 8பேர் கொண்ட குழுவினர் வட்டக்கச்சி பண்ணைக்கு அருகில்  முன்பு விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதி எனக் கருதப்பட்ட காணியில் புதையல் தோண்ட முற்பட்டுள்ளனர்.

எனினும் சந்தேகத்திற்கு இடமான சிலர் நடமாடுவதாக கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு கைது நடந்துள்ளது.

இதன்போதே மேற்படி 8பேரும் கைது செய்யப்பட்டதோடு இந்த 8 பேரில் பொலிசாரும் அடங்கியிருப்பதோடு சிங்களம், தமிழ், முஸ்லீம் என மூவினத்தவர்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளது தகவல்களை வைத்து புதையல் வேட்டை நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
No comments