கறுப்பு ஜனவரி நினைவேந்தல்!

 


தமது உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்யும் முகமாக ஊடக தொழிற்துறையில் ஈடுபடுகையில் பல்வேறு  வன்முறைகளை  எதிர்கொண்ட இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரி அழுத்தம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு” 2022 ஜனவரி மாதம் 26ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் நடத்த்துவதற்கு சுதந்திர ஊடக இயக்கம் திட்டமிட்டுள்ளது.

“படுகொலை செய்யப்பட்ட, காணாமல்; ஆக்கப்பட்ட தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்” என்பதே இவ்வருடத்திற்கான கறுப்பு ஜனவரியின் தொனிப்பொருளாகும். 

 ஜனவரி மாதம் 28ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாகவும் ஜனவரி 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கும் ஊடக அமைப்புகளின்  கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.


No comments