ஏமனில் சவுதி கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் 70க்கும் அதிகமான கைதிகள் பலி!


மத்திய கிழக்கு நாடான ஏமனில் சவுதூ தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 82க்கும் அதிகமான கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்னர்.

கிளர்ச்சியாளர் ஹூதி இயக்கத்தின் கோட்டையான சாதாவில் வெள்ளிக்கிழமை ஒரு சிறைச்சாலை மீதே விமானம் குண்டுவீசியிருந்தது.

விமானத் தாக்குதலுக்குப் பிறகு மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுத்தனர்,

சரியான இறப்பு எண்ணிக்கை தெளிவாக இல்லை.  குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாகக் எல்லைகளற்ற மருத்துவ தொண்டு  நிறுவனமான Médecins Sans Frontières (MSF) கூறியுள்ளது.

இத்தாக்குதலை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டித்துள்ளார்.

சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன.

சண்டையின் நேரடி விளைவாக 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பெரும்பாலான மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் நிற்கின்றனர்.

No comments