கிளிநொச்சி:காணி பிடி! காணி பிடி!! கிளிநொச்சி மாவட்டம் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பாளர்களால் திணறிவருகின்றது.

பளை முகமாலை பிரதேசத்தில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் திருச்சபைக்கு சொந்தமான காணி சுமார் ஒன்றரைக்கோடிக்கு மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. 

இதன்பின்னர் குறித்த காணியானது தமக்குச் சொந்தமானது என்று திருச்சபை அருட்தந்தையர்கள் பெயர் பலகையிணை நாட்டினர் .குறித்த பெயர் பலகை இரவோடு இரவாக சேதமாக்கப்பட்டு பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு பாகுபாடின்றி கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள்,புலம்பெயர் தமிழர்களது காணிகள் சுவீகரிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments