கோத்தா பேசப்போகிறாராம்?ஜெனீவா அர்விற்கு முன்னதாக பேச்சு நாடகத்தை கூட்டமைப்புடன் கோத்தா நடத்த முற்பட்டுள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் , அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும்  இடையில் விரைவில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளார் . 

இந்த மாத இறுதி வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சவார்த்தையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு, வடக்கு கிழக்கு அபிவிருத்தி, மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வ காணுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments