முதலை தாக்கி தமிழ் மகன் மரணம்!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த மீனவரை முதலை தாக்கியதில் மீனவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

திருக்கோவில் , மண்டானை பகுதியை சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்த்தி (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். 

 சாகாமம் தாலிபோட்டாற்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போதே முதலை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

No comments