யுத்த குற்றச்சாட்டுக்களை தவிர்ப்போம்:சஜித்!இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்குவதன் மூலம் யுத்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் சுமத்தப்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது காணாமல் போதல் உட்பட ஏனைய விடயங்கள் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவித் திட்டங்களை வழங்குவதற்கான நலன்புரி திட்டங்களையும் அவர்களையும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதன் மூலம் நல்லிணக்க நடவடிக்கைகள்  மூலமாக யுத்தம் தொடர்பான விடயங்களுக்கு தீர்வைக் காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனது தலைமையிலான எதிர்கால அரசாங்கங்கள் அவ்வாறன நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments