விபத்து! இராணுவச் சிப்பாய் படுகாயம்!


பதுளை ஹாலி - எலைப் பகுதியின் உடுவரை என்ற இடத்தில் இன்று காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுங்காயங்களுக்குள்ளான நிலையில், அவர் பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த இராணுவ சிப்பாய், கந்தளாயிலிருந்து, தியத்தலாவைக்கு கடமைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் உடுவரை என்ற இடத்தில், நாயொன்று குறுக்கே பாய்ந்ததினால், நிலைத்திடுமாறி குறித்த, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ் விபத்தில், உந்துருளியைச் செலுத்திய இராணுவ சிப்பாய், மோட்டார் சைக்கிளிலிருந்து, அருகேயுள்ள வயல்வெளிக்கு தூக்கி எறியப்பட்டதையடுத்து படுகாயமடைந்துள்ளார்.


No comments