மாகாணசபை தேர்தலை எதிர்கொள்வோம்!!

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுமென கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அவர் யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்ததுடன் ஆனாலும் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி பாரிய பேரணி ஒன்றை நல்லூரில் நடத்துகின்றோம்.அதனை தடுத்து நிறுவதற்கு பல சதிகள் நடைபெறுகின்றன. ஆனாலும் திட்டமிட்ட படி பேரணி நடைபெறும்.

மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று, அதனை 13ஆவது திருத்தத்துக்குள் முடக்குவதற்கு எத்தனிக்கும் தரப்புக்கு தான் இப்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது எமது பேரணி.

நாங்கள் அதில் வெற்றி பெற்று இந்திய முகவர்கள் தமிழ் மக்களுக்கும் செய்யவிருந்த கெடுதலை அம்பலப்படுத்துவோம். அது தான் அவர்களின் பயம்.

அந்த வகையில் தான் நாம் தேர்தலில் போட்டியிடுவோம். ஏனைய தமிழ் தரப்புகள் 13 ஆவது திருத்தத்தை ஆதரித்து மக்களை புதைகுழியில் தள்ளுவதற்கு முயறசிக்கின்றனர்.

ஆனால் நாம் இந்த தேர்தலை எதிர்கொண்டு, 13ஆவது திருத்தத்தின் ஆபத்தையும், பலரின் உண்மை முகத்தையும் மக்களும் அம்பலப்படுத்துவோம். 

இதனிடையே அடுத்துவரும் வடமாகாணசபையின் முதலமைச்சர் கதிரைக்கு மோதிக்கொள்வதாக தெரிவிக்கப்படும் சட்டத்தரணிகளான சுகாஸ் மற்றும் காண்டீபன் ஆகிய இருவரும் ஒன்றாக புகைப்படமெடுத்து பதிவு செய்துள்ளனர்.

ஆதரவாளர் ஒருவரது வீட்டு திருமணத்தில் பங்கெடுதத போது உணவு இடைவேளையில் தமது ஒற்றுமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் ஒப்பமிட்ட ஆறு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளைய தினம் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில்  சட்டத்தில் தற்போதுள்ள விடயத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிய விடயத்தை அதனையே தீர்வாக கோருகின்றோம் என மற்றுமோர் கட்சி தவறாக பிரச்சாரப்படுத்துவது தொடர்பிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாளை காலை 10 மணிக்கு யு.எஸ் விடுதியில் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திப்பினை தொடர்ந்து மதிய விருந்துபசாரமொன்றும் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சி ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




No comments