இராணுவத்தை புகைப்படமெடுத்தால் கைது!


யாழில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை வீடியோப் படம் பிடித்த மூன்று பொதுமக்கள் கைதாகியுள்ளனர்.

வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை நையாண்டி செய்ததாகவே புகார் அளிக்கப்பட்டு கைது நடந்துள்ளது.

எனினும் வெளிநாடு செல்லும் நோக்கில் இவ்வாறு நாடகம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு தகவல்களை கசியவிட்டுள்ளது.

இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் மூன்று இளைஞர்களிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

இதனிடையே இராணுவத்தினரை புகைப்படம் பிடித்ததாக குற்றஞ்சுமத்தி கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


No comments