கழுத்தை பிடித்து தள்ளினாலும் போகமாட்டோம்!

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளாது. கூட்டுக் கட்சிகள் இடையே சிறுசிறு மனக்கசப்புகள், சச்சரவுகள் இடம்பெற்றாலும் அரசிலிருந்து வெளியேறும் எந்த ஒரு எண்ணமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை.  அவ்வாறு எதிர்பார்ப்போரின் கனவு ஒருபோதும் நிறைவேறாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இரு பிரதான கட்சிகளுக்குமிடையே நிலவி வரும் சிறு பிணக்குகளை வைத்து அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறப் போகிறதென சிலர் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை சரியாக விளங்கி அவற்றை முன்னெடுத்துச் சென்று மக்களை சீரான வாழ்க்கைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதில் இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே உறுதியாக இருக்கிறார்கள்.

நாடு கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத ஒரு நிலையில் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு அதன் பங்காளிக் கட்சி எனும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பூரண பங்களிப்பை முழுமையாக வழங்கி வருகிறது. கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசுக்கு எமது கட்சி தோளோடு தோள் நிற்கும். என பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

No comments