உக்ரைன் பதற்றங்கள்! புதிய பேச்சுக்கு ரஷ்யாவை அழைக்கிறார் நேட்டோ பொதுச் செயலாளர்!


உக்ரைன் நெருக்கடி குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை அழைப்பை விடுத்துள்ளார் நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்.

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை பேர்லினில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பிலேயே ஸ்டோல்டன்பெர்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரம் முன்னோக்கி செல்லும் அரசியல் வழியில் முன்னேற்றம் காண்பதே இப்போது முக்கிய பணியாகும். ஆனால் ஒரு போரின் ஆபத்து உண்மையானது என்றார்.

மொஸ்கோ மற்றும் மேற்கு நாடுகளின் கவலைகளை நிவர்த்தி செய்ய நேட்டோ-ரஷ்யா கவுன்சிலில் தொடர்ச்சியான கூட்டங்களை முன்மொழிந்துள்ளோம். உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் தடுக்க முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டறிய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பதற்கான சரியான தேதியை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்திற்கு இந்த விவாதங்கள் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

ரஷ்யா, அமெரிக்கா, நேட்டோ மற்றும் பிற மேற்கத்திய சக்திகளுக்கு இடையே கடந்த வாரம் பல்வேறு ஐரோப்பிய தலைநகரங்களில் நடைபெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நெருக்கடியில் ஒரு முன்னேற்றத்தை உருவாக்கத் தவறிவிட்டன.

No comments