சங்கரி வெளியே:மோசடி குழு கவனமாம்?
தமிழர் விடுதலைக்கூட்டணியின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தெரிவு செய்ய இன்று யாழில் மத்திய குழு கூடுகின்றது.நாளை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர்,மத்தியகுழு உறுப்பினர் விபரங்களை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு இன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும், இதில் கலந்து கொள்வது சட்டவிரோதமான செயலெனவும் ஆகவே இதில் கலந்து கொள்ள வேண்டாம் என கூட்டணியின் செயலாளர் நாயகம் என சொல்லிக்கொள்ளும் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நேற்றைய திகதியிட்ட கடிதத்திலேயே குறித்த விடயத்தைக் குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆனந்தசங்கரி, குறித்த மோசடிக்காரர்களுக்கெதிராக தனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அவர்களுடன் தொடர்பை வைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதனிடையே கொரோனா தொற்நு காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments