மிளகாய் தூள் விற்பனையில் ரணிலுமாம்!இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரணிலும் இருந்தமை அம்பலமாகியுள்ளது.

ரணிலின் பின்னணி தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

தற்போதைய பிரதமரும், ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடிவிட்டு இவ்வாறு செய்தார்களா? இதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இருந்தாரோ என, கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

நானும் தற்போதைய பிரதமரான மகிந்தவும் கலந்துரையாடியதன் பின்னரே, மிளக்காய்த்தூள் வீசப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அதுதொடர்பில் தான் வியப்படைந்தேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலப்பகுதியில் அமைச்சினை கைப்பற்ற நடைபெற்ற குழப்பத்தின் போதே மிளகாய் தூள் வீசப்பட்டுள்ளமை தெரிந்ததே.


No comments