துரத்தி பிடித்து வந்தது புலனாய்வு!

 

இலங்கை நீதி அமைச்சர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் முழுமையாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

முல்லைத்தீவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை நேற்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுடன் பி.ப 2.00மணியளவில் கலந்துரையாடலொன்றை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி மேற்கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் காதர் மஸ்தான், நீதி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னை, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லினக்கத்திற்குமான அலுவலக பணிப்பாளர் நாயகம் டிப்தி லமகேவ, இழப்பீட்டுக்கான அலுவலக பணிப்பாளர் நாயகம், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், குறித்த நடமாடும் சேவையில் பங்கெடுக்கும் அலுவலகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதனிடையே முன்னாள் போராளிகளை இராணுவ புலனாய்வு பிரிவினரே துரத்தி துரத்தி சந்திப்பிற்கு அழைத்து வந்ததாகவும் கண்துடைப்பாகவே சந்திப்பு நடைபெற்றதாகவும் முன்னாள் போராளிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.


No comments