கரைச்சி பிரதேச சபை:கொடி மற்றும் சின்னம் அறிமுகம்! கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.15 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய கொடி ஏற்றப்பட்டு அரச உத்தியுாகத்தர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையினால் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட கரைச்சி பிரதேச சபை கொடி தவிசாளர் வேழமாலிகிதனால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து கரைச்சி பிரதேச சபைக்கான சின்னம் மறு சீரமைக்கப்பட்டு இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த சின்னத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.

No comments