20 வருடமாக குந்தியிருந்து சாதனை!



யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் ஆயுள் முழுவதும் ஒரே பிரதேச செயகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்களால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் 20 வருடங்களைத் தாண்டியும் 6 அலுவலக உதவியாளர்கள் (பியோன்) பணிபுரிவதாக  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்கள், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27 வருடங்கள், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர் 22 வருடங்கள், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் ஒருவர் 22 வருடங்கள் பணியாற்றுகின்றார்கள்.

5 வருடங்களைத் தாண்டி 20 பேர் பிரதேச செயலகங்களில் பணியாற்றுகிறார்கள். கோப்பாய் பிரதேச செயலகத்தில் 5 பேர்,  நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒருவர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 4 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 4 பேர்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் 2 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 2 பேர், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர், உடுவில் பிரதேச செயலகத்தில் ஒருவர் பணியாற்றுகின்றார்கள்.

இடமாற்றமின்றி பணியாற்றுவதால் அந்த அலுவலகங்களை தமது உரிமை இடமாக எடுத்துக் கொள்வதாக தேவை கருதி பிரதேச செயலகங்கள் செல்லும் மக்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றனர்.

அதாவது அலுவலகத்தில்  பிரதேச செயலர் இருந்தும் சந்திக்க விடாது தடுப்பதும்,  தேவை கருதி அலுவலகம் செல்லும் போது ஏன் நிற்கிறீர்கள் வெளியே போகுமாறும் கூறுவதும் அலுவலகம் செல்லும் மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்குகிறது. சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இருக்கும் போதும் ஏன் வந்தீர்கள் என்று கேட்டு, அவர்களின் தேவை தொடர்பில் தாமே விளக்கம் கொடுத்து திருப்பி அனுப்புவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.



No comments