இலங்கையர் ஒவ்வொருவரும் கடனாளி!
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 8இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த முடியாமையே இதற்கு காரணமாகும்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் ரூ.17.2 ட்ரில்லியனாக உள்ளது .

1977 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரச தலைவர்களாலும் அரசாங்கங்களாலும் வெளிநாட்டுக் கடனைக் குறைக்க முடியவில்லை .அமெரிக்க டொலரொன்றின் மதிப்பு ரூ.200 முதல் 240 வரை உள்ளதால், நாட்டின் டாலர் கையிருப்பு வேகமாக குறைந்துள்ளது என்றும் இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரலாம் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.

No comments