ஒட்டகத்திற்கு இடம் வேண்டாம்: ஆனோல்ட்!

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவிப்பதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பது அப்பட்டமான துரோகம் என மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் புதுவருட தினத்தன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது கலாச்சார மண்டபத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காவிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவித்ததாக முதல்வர் பதிலளித்தார்.

இந்த இணக்கத்திற்கு  எங்கு, யாரால், எப்போது தீர்மானிக்கப்பட்டது.  அந்த இணக்கம் தெரிவிப்பது தொடர்பில் சபையில் இதுவரை ஏதும் பிரஸ்தாபிக்காமல் இணக்கத்தை தெரிவிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு யார் வழங்கியது. இந்த செயல்பாடானது ஒட்டகத்திற்கு இடம் கொடுப்பதற்கு ஒப்பானது எனவும் தெரிவித்தார்.

No comments