மாதகல் மீனவனை கொன்றது இலங்கை கடற்படை!

இலங்கை கடற்படையினரின் படகு மோதி மாதகலில் மீனவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

மாதகல் கடற்பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது மாதகல் மாரீசன்கூடலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

37 வயதுடைய எட்வேட் மரியசீலன் என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மீனவனின் உடலம் கரைக்கு எடுத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

No comments