பத்தாயிரம் பேரூந்துகள் முடக்கம்?இலங்கையில்   சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

பேருந்து சேவையாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.


No comments