அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்தது வடகொரியா


கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது.  2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 7 ஏவுகணைகளை வடகொரியா ஏவியிருக்கிறது.

பாலிஸ்டிக் மற்றும் அணு ஆயுத சோதனைகளில் இருந்து தடை செய்கிறது ஐ.நா தடைகள் உள்ளபோதும், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோதும் வடகொரியா தனது சோதனைகளை நடத்திவருகிறது.

வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (22:52 GMT) உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் இந்த ஏவுகணை 2,000 கிமீ (1240 மைல்கள்) உயரத்தை எட்டியதாகவும், 800 கிமீ (500 மைல்கள்) தூரத்திற்கு 30 நிமிடங்கள் பறந்ததாகவும் மதிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் செயல்களை தவிர்க்குமாறு வடகொரியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் தனது நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

உலக மற்றும் பிராந்திய சக்திகளுக்கு பலத்தைக் காட்டுவது. நீண்டகாலமாக நின்றுபோன அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்காவை மீண்டும் அழுத்தத்தைக் கொடுப்பது. புதிய தொழில்நுட்ப பொறியியல் சோதனைகள் இதற்கப் பின்னால் இருக்கின்றன என பரிந்துரைக்கப்படுகின்றனர்.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு சற்று முன்பும், மார்ச் மாதம் தென் கொரிய அதிபர் தேர்தலுக்கு முன்பும் இந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக வடகொரியாவால் கருதப்படுகிறது.

No comments