புரியாணி ஏலேலோ! 13 ஏலேலோ!!

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடான விருந்துபசார சந்திப்பில் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் இதுவரையிலும் எந்த தகவலுமற்றறுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்களை பற்றி கேட்டறிந்து கொண்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் விருந்துபசாரத்தின் போது அதனை பின்னர் மறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே ராஜதந்திர விருந்துகளை சேறுபூசவேண்டாமென சுமந்திரன் ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.இதனிடையே யாருமற்ற நிலையில் வத்திராயன் கடல்தொழிலாளர் சங்கத்தின் முன்னெடுப்பில் நான்காவது நாளாக வத்திராயன் கிராம மீனவர்கள் மற்றும் இளைஞர்களால் மாத்திரம் இரவு பகலாக தேடுதல் பணி தொடர்கின்றது. தமிழ் அரசியல் கட்சித் தலைகளை கூட அப்பகுதியில் காணக்கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


No comments