பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின்குரல் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமிழர்

ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய விளையாட்டுத்துறையினரால் கொவன்றி(Coventry) பகுதியில் நடாத்தியிருந்தார்கள். பல அணிகள் பங்குபற்றியிருந்தன.

வழமைபோல் விளையாட்டு நிகழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

5 பேர் கொண்ட அணிப் பிரிவில் முதலாவது இடத்தினை இன்பராஜ் அணியினரும் இரண்டாவதாக ரிங்கோ ஷ்ரார் அணியினரும் மூன்றாவதாக மில்லர் அணியினரும் பெற்றிருந்தார்கள். 

5 பேர் கொண்ட பிரிவில் சிறந்த ஆட்டக்காரராக பரஞ்சோதியும் தொடரின்  சிறந்தவருக்கான விருதினை ஜுலியட்டும் பெற்றுக்கொண்டனர்.

4 பேர் கொண்ட அணிப் பிரிவில் முதலாவது இடத்தினை  றிங்கோ ஷ்டார் விளையாட்டுக்கழகமும் இரண்டாவதாக சுபன் விளையாட்டுக்கழகமும் மூன்றாவதாக ஈழம் விளையாட்டுக்கழகமும் பெற்றிருந்தார்கள். 

4 பேர் கொண்ட பிரிவில் சிறந்த ஆட்டகாரராக நேசனும் தொடரின்  சிறந்தவருக்கான விருதினை ரூபனும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றிபெற்ற கழகங்களுக்கும் சிறந்தவிளையாட்டு வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டதோடு, பங்குபற்றிய கழகங்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டு, விளையாட்டுப்போட்டி இனிதே நிறைவுற்றது.

No comments