உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு! ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை!!


உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தொடுத்தால் போர் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என்று மேற்கத்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பிரித்தானியப் புலனாய்வுதுறை அதிகாரி ஒருவர் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது:-

உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கினால் நாங்கள் பாராமுகமாக இருக்கக்கூடாது. அப்போர் நேட்டோ உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

ஒரு தேசத்திற்குப் போரைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைப்பது முட்டாள்தனமானது என்று அவர் கூறினார்.

இது ரஷயாவினால் அரங்கேற்றும் நடாகம் என்று நினைப்பதைவிட நிலையான செயற்பாடே என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் செய்தியாளர்களிடம் கூறும்போது:-

உக்ரைனுடனான அதன் எல்லையில் ரஷ்யாவின் இராணுவக் குவிப்பு ஆழ்ந்த கவலைக்குரியது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் அடிப்படையில் மோசமான காட்சிகளின் முக்கியத்துவம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் காணப்படாத அளவில் இருக்கும் என்றார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், எல்லையில் ரஷ்யாவின் இராணுவக் குவிப்பு தொடர்கிறது.

மேற்கத்திய உளவுத்துறையின் மதிப்பீட்டின்படி, ரஷ்யா ஏற்கனவே 100,000 துருப்புக்கள் உக்ரைனின் எல்லைக்கு அருகில் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் படை 175,000 ஆக உயரக்கூடும் என்று வாஷிங்டன் பரிந்துரைத்துள்ளது.

ரஷ்யா இப்போது தாக்குதல் நடத்த விரும்பினால், அதைச் செய்ய முடியும் என்று மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரி கூறினார். ஆனால், எல்லையில் குவிந்துள்ள ரஷ்யப் படைகள் இன்னும் சில முக்கிய பிரிவுகளைக் காணவில்லை. முழு தளவாட ஆதரவு, வெடிமருந்து இருப்புக்கள், கள மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகள் போன்றவை காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments