புங்குடுதீவு வீட்டுத் திட்டத்திற்குள் நீர்!! மக்கள் பாதிப்பு!!


தொடரும் மழை காரணமாக, யாழ்ப்பாணம்,- புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, குறித்த வீடுகளுக்குச் செல்லும் வீதியும் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களுடைய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments