யாழிலும் தாதியர்கள் போராட்டம்


அகில இலங்கை ரீதியாக 13 ஆயிரம் தாதி உத்தியோகத்தர்கள் தமது பதவி உயர்வினை இழக்கின்ற நிலை தற்போது எற்படுகின்றது.

அதற்காக எமது சங்கப்பிரதிநிதிகளுடான அகில இலங்கை ரீதியாக போராட்டம் இடம்பெறுகின்றன என அரச தாதியர் உத்தியோக சங்கத்தலைவர் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனம், மற்றும் அரச தாதியர் உத்தியோக சங்கம், இலங்கை தாதியர் சங்கத்தின் கம்பனி யூனியன், ஆகியவற்றின் ஒருங்கிணைந்த எற்பாட்டில் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ரணக்கே என்ற அரசதிட்டத்தினை அமுலாக்கவேண்டும் என வலியுறுத்தி 19 அம்சகோரிக்கையினை உள்ளாடக்கிய கண்டன கவனயீர்ப்பு போராட்டப் பேரணி இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.


அங்கியிருந்து யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று பலாலி வீதியூடாக சென்று அங்கியிருந்து ஆரியகுளம் வீதியூடாக சென்று பழைய மணிக்குகூட்டு வீதிவரை சென்று பின்பு யாழ் மத்தியபேரூந்து நிலையத்தில் நிறைவுபெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த அரச தாதியர் உத்தியோகச் சங்கத்தலைவர்,சுகாதார அமைச்சுக்கும், அமைச்சருக்கும் தெளிவாக கூறுகின்றோம். எமது கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்று இந்த போராட்டங்கள் நடத்தப்பெற்றாலும்  கூட எந்தொரு நடவடிக்கையினையும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சுகாதார அமைச்சரின் செயலாளர் கூட எமது போராட்டத்தின் கோரிக்கைக்கு செவி சாய்காமல் உள்ளனர்.

சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ரணக்கே சம்பள ஆணைக்குழுவில் 2010 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும், மேலதிக நேரக்கொடுப்பனவினை அதிகரிக்க வேண்டும், விசேட கொடுப்பனவினை அதிகரிக்கவேண்டும், பதவிநிலை சுற்றுநிருபம் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டபோதிலும், அதன் காரணமாக சுகாதார அமைச்சு அதற்காக சுற்றுநிருபத்தினை வெளியிடவில்லை, சுகாதார அமைச்சர் இராணுவத்திற்கு அல்ல அவர் பொதுமக்களுடைய  தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். 


இதனால் எமது கோரிக்கைகளுக்கான நிவாரணங்களை பெற்றுத்தரும் வரை எமது போராட்டம் அரசு எதிராக முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் அரசதாதியோர் உத்தியோகச் சங்கத்தலைவர் தெரிவித்தார்.

இதன்போது 300 க்கும் மேற்பட்ட தாதிமார்கள், தொழிற்சங்க உத்தியோகத்தர்கள், பணிநிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கையினை உள்ளடக்கிய பதாதைகளை எந்திய வண்ணம் சென்றனர்.

இலங்கை தாதியர் சங்கத்தின் கம்பனி யூனியனின் தலைவர் அஜீத் திலகரட்ண, அரச தாதியர் தொழில் வல்லுனரின் ஒன்றியத்தலைவர் எ.ரவிகுமுதுகே. அகில இலங்கை தாதியர் சங்கத்தின் நிறைவேற்று இயக்குனர் உதய திஸ்ஸ நாயக்க, வடமாகாண தாதியர் சங்கத்தின் செயலாளர் என் கிரிதரன், உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

No comments