கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நிரம்பியிருந்த உணவகத்தில் தற்கொலைத் தாக்குதல்! 6 பேர் பலி!!


ஆபிரிக்கா நாடான கொகோ ஜனநாயக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் உணவகம் ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்கொலைக் குண்டுதாரியை காவல்துறையினர் கட்டிடத்தின் நுழைவதை தடுத்ததை அடுத்து அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்.

இத்தாக்குதலில் தற்கொலைத்தாரி உட்பட ஆறுபேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய குழுவான நேச சனநாயகப் படைகளை அரச அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பெற்றவில்லை.

No comments