நூற்றியோராவது குழு வந்தது- சென்றது! கோத்தபாய ராஜபக்சவினால் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கிளிநொச்சிக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளுவதற்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டு, படையினரின் ஏற்பாட்டில் வருவிக்கப்பட்டவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

எனினும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப உறுப்பினர்களது அமைப்புக்கள் இத்தகைய ஆணைக்குழுவை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments