மீண்டும் இலங்கையில் மின்வெட்டு!

 
இலங்கையில் பல பகுதிகளிலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

நான்கு மின் பிறப்பாக்கி இயந்திரங்களில் ஒன்றில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படலாம் என்றும் 30 நிமிடங்களுக்கு அதிகமாக மின் தடைப்படாது என்றும் அமைச்சு தெரிவித்திருந்தது.

முன்னதாக இன்றையதினம் முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்று ஏற்கெனவே மின்சக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments